ஊத்துக்குளி வெண்ணெயிடாடோய்

Wednesday, August 24, 2005

வெற்றிக்கு வழி !!!

வெற்றிக்கு வழி !!! கீ டு சக்ஸஸ் ! என்ற தலைப்போட வந்த மின்னஞ்சலை கர்ம சிரத்தையோடு திறந்து பார்த்தால் .....


வெற்றிக்கு வழி பற்றிய மிகுந்த ஆராய்சிக்குப் பிறகு கிடைக்கப்பெற்ற முடிவு என கீழேயுள்ள படம்.....




ஜால்ரா போட்டால் தான் வெற்றி பெற முடியுமா என்ன ??? உண்மை என்பவர்கள் விளக்கவும்.....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, August 23, 2005

குரு பார்வை - ராசாவுக்கு !!

ராசாவுக்கு நல்ல நேரம்னு நினைக்கிறேன்... குரு பார்வை சுப பலம் பெற்று இருந்ததால் தப்பித்தார்....

டார்கெட் 300 ரூபாயோட போச்சு...ரோட்ல இப்படி தோப்பு கரணம் போடுறத ராசாவோட அய்யன் பார்த்துட்டு போய்ருந்தா என்ன ஆயிருக்கும்...






காசு வாங்கிக்கொண்டு விடுவதை விட, இந்த Treatment நல்ல பலன் தரும் என நினைக்கிறேன் !!! அடுத்த முறை விதிகளை மீறும் முன்னர் மக்கள் கண்டிப்பாக யோசிப்பர்...(பொது இடத்தில் தோப்பு கரணம் போடுவது அவமானம் தானே ?)..

பி.கு :
படம் உதவி : தினமலர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, August 22, 2005

சிறுகதை - காதலர் தினம் !!!

"தைப்பூசத் தேர்த்திருவிழாவைக் காண வந்திருக்கும் பக்த கோடிகளை வருக ! வருக ! என ...... சார்பில் வரவேற்கிறோம்" என்று ஒலிப்பெருக்கியில் விளம்பரம் வந்து கொண்டிருந்தது. ஊத்துக்குளி கைத்தமலை தேர்த்திருவிழாவைப் பார்க்க பெங்களூரிலிருந்து வந்திருந்த நந்தினிக்கு அதிசயம் கலந்த ஆச்சர்யம்.
அசைந்தாடி வரும் தேரின் அழகை ரசித்துக் கொண்டே மலையுச்சியில் இருந்து கீழே தான் படித்த பள்ளியை நந்தினிக்கு காட்டிகொண்டு இருந்தேன் நான்.
பள்ளியைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மனதில் ஓடின.. பள்ளி, கல்லூரி, வேலை, வெளிநாடு என காலத்தின் வேகத்தை நினைத்து நினைவுகளை அசைபோடும் போது தான் நந்தினி ஞாபகம் வந்தது.. யாரிவள், இவளெப்படி இங்கே ? மனது மறுபடியும் இரண்டாண்டுகள் பின் சென்றது...
லண்டன். ஆகஸ்ட் 15.. ச்சே..என்னடா இது, சுதந்திர தினத்தன்றும் அலுவலகம் வர வேண்டியிருக்கிறது என்று நொந்து கொண்டே, யாகூ மெஸஞ்சரை திறந்தேன். நண்பர்கள் வரிசையில் தமயந்தி ஆன்லைனில் இருந்தாள்.
ஹே ! தமா, எனக்குத்தான் லீவு இல்லைன்னாலும் உனக்கென்னாச்சு ?
இல்லடா..காலைல கிளையண்ட் வந்திருந்தாங்க..அதான்.. வீட்டுக்கு போலாம்னு கெளம்பினேன், நீ வந்துட்டே என்றாள் தமயந்தி.
சரி, கொஞ்ச நேரம் என்னோட பேசிட்டு போவயாம் என்று சொல்லிவிட்டு பதிலுக்காக காத்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து சரிடா என்றாள்.
தமா, என்ன பண்ணிட்டு இருந்தே ??
அதுக்குள்ள ஒருத்தன் கூட பேசிட்டிருந்தேன்...
யாரு ? உன் ஆளா ??
என் ஆளு இல்லடா...இங்க யாரும் பாக்கர மாதிரி இல்ல..
இது ரொம்ப ஓவரு..சரி அத விடு, உங்கூட பேசிப்பேசி சலிச்சுப் போச்சு, வேற யாராவது இருந்தா சொல்லேன்...
பக்கத்துல என் ப்ரண்டு இருக்கா, பேசுரியா ???
ம்ம்ம்ம் போட்டேன் நான்...
உடனே மின்னஞ்சல் முகவரியை கொடுத்து, என்னமோ பன்னிக்கோ என்றாள்....மின்னஞ்சல் முகவரியில் பெயர் நந்தினி என்றிருந்தது..
கொஞ்சம் தயக்கமும், பயமும் கலந்து, ஹாய் என ஒரு மடல் அனுப்பினேன்..பதிலும் ஹாய் என்று சுருக்கமாக வந்தது.. உடனே தேம்ஸ் நதியின் இன்றைய படத்தை இணைத்து, இன்று தண்ணி ரொம்ப கம்மி என்று ஒரு பில்ட் அப் கொடுத்தேன். அதுக்கும் பதில் 'ஓஹோ' என்றிருந்தது...
அவ அப்படிதாண்டா, சோம்பேறி...முடிஞ்சா மாத்து - இது தமயந்தி.
தினம் தினம் பதில் மடல் ஒரு வரி கூடியது.....பள்ளி, கல்லூரி நினைவுகள், குடும்பம் பற்றி விவரங்கள் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோம்....
சில நாள் கழித்து,
நந்தினி, உன்னை பாக்கனும் போல இருக்கு, ஒரு போட்டோ அனுப்பேன்..
கேட்பதற்கு முன்பே என்னுடைய புகைப்பட கோப்பை தமயந்திக்கு அனுப்பும் சாக்கில் நந்தினிக்கும் அனுப்பியிருந்தேன். அப்படியே தமயந்தியிடம் போராடி நந்தினி புகைப்படத்தையும் வாங்கியிருந்தேன்..செல்லிடப் பேசியில் எடுத்த படம்.
சிறிய புகைப்படம் தான் உள்ளது, ஒரு வாரம் பொறுத்துக் கொள் என்றாள் நந்தினி..
உனக்காக காத்திருக்க தயார் என்று மடல் அனுப்பினேன், புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே !!
தமா, பாத்தியா, நந்தினிய மாத்திட்டேன் என்றேன் பெருமையோடு..
ஒரு நாள், எப்போ கல்யாணம், தமிழ்ப் பொண்ணா இல்ல வெள்ளைக்காரியா ?? என்று கேட்டு மடலனுப்பியிருந்தாள் நந்தினி... என்ன பதில் சொல்வதென்று தமாவைக் கேட்டேன்...
பேங்களூர்ப் பொன்னு, அதுவும் நீ பாக்குற பொண்ணுன்னு சொல்லு, விழுந்துடுவ என்றாள் தமா... நானும் அப்படியே பதில் அனுப்பினேன்.. சரி கண்டிப்பா உனக்காக பொண்ணு பார்க்கிறேன் என்றாள் நந்தினி...
இந்த வாரம், மூணு நாள் லீவு போட்டுட்டு, குடும்பத்தோட திருப்பதி போறோம்டா.. என்றாள் தமயந்தி.
எனக்கும், நந்தினிக்கும் சேர்த்து வேண்டிக்கோ !! என்றேன்..
டேய், அடி வாங்கப் போற, இந்தியா வா, உனக்கிருக்கு என்றாள்.
தமா திருப்பதி போன பின்பு, முதல் முறையாக நந்தினியுடன் தொலை பேசினேன்.
பேச்சுவாக்கில், உன் பிறந்த நாள் எப்போ என்றேன்... சொல்ல மாட்டேன்! என்ற பதிலை எதிர்பாத்து..
நவம்பர் 26 என்றாள் நந்தினி....
ஹே, என்னோட அக்கா வெட்டிங் டே அன்னிக்குத்தான், என் அக்கா பையன் பிறந்த நாளும் அதுதான்..
ரியலி ???
ம்ம்ம்ம்....
ஊருக்கு எப்ப வர்றே என்றாள் அக்கறையுடன்...
நவம்பர் ல வந்துடுவேன்..உன் பிறந்த நாளை கொண்டாட நான் அங்கே இருப்பேன்..
நெஜமாவா ?? பொய் சொல்லாத ...
அட, நெஜமாத்தான், நவம்பர் ல வர்றது மொதல்லயே முடிவு பண்ணது..
சரி, உன்னை எதிர்பார்ப்பேன் என்றாள்..என்ன அர்த்தத்தில் சொன்னாள் என்று தெரியவில்லை..
நட்புடன் என்று மடலில் குறிப்பிட்டு பழக ஆரம்பித்து, நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்..வாரம் 3 காலிங் கார்டு என்றிருந்தது 4, 5 என உயர்ந்தது...
என்னுடைய மனதை அறிந்து அவளும், அவளுடைய மனதை நானும் அறிந்து கொண்டு பழகினோம்... என்னுடைய விருப்பு, வெறுப்புகள், எனக்கு பிடித்தது, பிடிக்காதது என அனைத்தையும் தெரிந்து கொண்டாள், நானும் தான்...
என்னையறியாமல் நந்தினி பற்றி சதா நினைத்திருந்தேன்..
டேய், என்னடா பண்ணுன நந்தினிய, எப்பப் பார்த்தாலும் உன் புராணமே பாடுரா ?? என்றாள் தமயந்தி...
அப்படியே சரவணன் கிட்டயும் பரீதா கிட்டயும் சொல்லிட்டா... என்னடா காதலர் தின பட ஸ்டைலா ?? என கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்..
சொன்ன மாதிரி நவம்பர் ல ஊருக்கு வர முடியவில்லை.. பிப்ரவரி ல் தான் வர முடிந்தது.. வரவேற்க நந்தினியும் வந்திருந்தாள் விமான நிலையத்துக்கு.. முதன் முதலில் நேரில் சந்தித்தோம்... இனம் புரியாத சந்தோசம் இருவர் முகத்திலும்...
இனிமே என்ன பார்க்க வர்றியோ இல்லயோ, நந்தினியைப் பார்க்க அடிக்கடி வருவே என்றாள் தமயந்தி...
அவ்வாறே, கெம்ப் ஃபோர்ட், இஸ்கான் என்று ஆரம்பித்து, பிச்சா கார்னர், ஃகாபி டே என்று அடிக்கடி சந்தித்தோம்...
பல நாள் அவள் வீட்டுக்கு நானும், 2 முறை என் வீட்டுக்கு அவளும் போய்வந்தோம்..
அம்மாவுக்கு நந்தினியை ரொம்ப பிடித்துப்போய் விட்டது....
இருவர் வீட்டிலும் முழு சம்மததுடன், திருமணம் முடிந்து இன்றோடு ஒரு வருடம் முடிய போகிறது....
நடந்ததெல்லாம் கனவு போல் மனதில் ஓடிக்கொண்டிருக்கையில்,
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !!! வைர வேல் முருகனுக்கு அரோகரா !!! என்ற கோஷம் கேட்டு திரும்பி பார்க்கையில் அழகு கொஞ்சும் வெற்றி வேல் முருகன் அசைந்தாடும் தேரில் பவனி வந்து கொண்டிருந்தான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.